Wednesday, January 20, 2010
காலச்சூத்திரம்..
காலச்சூத்திரம்..
குருதி மணக்கும்
விரோதி கையில்
விருந்தாளிப் பத்திரம்..
மறதியென்னும் வியாதி…
அரைவிழி நிலையில்
அசைபோட மறந்த
பெருங்கனவென
நினைவிழந்தன
நேற்றைய நிதர்சனங்கள்..
ஒற்றைப்பனை..
லட்சத்து நான்கு
முன்பொரு நாள்
சட்டிப் பானையுடன்
குண்டுச் சத்தத்தையும்
சுமந்து சென்றவர்களை
இரண்டு மடங்காய்
எண்ணிய ஞாபகம்..
சுழலென்னும் சூழல்..
வெட்டியவன் வீட்டில்
விறகா இல்லை
வெட்டிய கோடரிக்குப்
பிடியா
சரிந்த மரத்திடம்
ஜனநாயகம் கேட்டது..
லேபிள்கள்:
eezham,
parthiban,
tamil,
Tamilvaasam,
tamizh,
tamizhvaasam,
பார்த்திபன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment