Thursday, August 27, 2009

சிந்தையில் சிதறியவை…


அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிய சிந்தனைச் சில்லறைகள் மொத்தமாய் உங்கள் கவனத்திற்கு…
நீர் வற்றியதால் வெள்ளப் பெருக்கு;
பாசனம் பெற்றன, உழவனின் கண்கள்!!!
——————————————————————————————
கைக்குழந்தையும் கள்ளிப்பாலுமாய்
கண்ணீருடன் நின்றவளிடம்
பொய்த்துப் போனது
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு”
——————————————————————————————–
இடது கையில் அரசாங்கப் படி
வலது கையில் கிரீன் கார்ட் வாங்குவதெப்படி
தாங்கி நிற்கின்றன
இந்தியாவின் நாளைய தூண்கள்!!!!
———————————————————————————
இது இருநூறாவது ரூம் பிரெஷ்னர்
இன்னும் கிடைக்கவில்லை…
என் கிராமத்து மண் வாசனை!!!!
——————————————————————————————–
பாதி கிழிந்த பழைய புத்தகம் மேடை மேல்
பூசையில்
வாங்கித் வந்த தந்தை முதியோர் இல்ல
மூலையில்!!!
சாதித்தவன் வீட்டில்
“சரஸ்வதி பூஜை”
எதாவது கொஞ்சம் வித்யாசமா முயற்சி பண்ணலாம்னு பாத்தேன்…. எப்படி வந்திருக்குன்னு தெரியல கொஞ்சம் சொல்லுங்களேன்…

3 comments:

A.Muthukumar said...

பாதி கிழிந்த பழைய புத்தகம் மேடை மேல்
பூசையில்
வாங்கித் வந்த தந்தை முதியோர் இல்ல
மூலையில்!!!
சாதித்தவன் வீட்டில்
“சரஸ்வதி பூஜை”
...நல்ல இடுகை ...
அம்மாவை கொண்டாடி இருக்கிறகவிதைகளும் இலக்கியங்களும் ஏனோதெரியவில்லை அப்பாவை கொண்டாடியதே கிடையாது. அப்பா கொண்டாட்டத்திற்கு உரியமனிதராக தன்னை முன்நிறுத்தியதே கிடையாது என்பதே அப்பாவின் மிகப்பெரிய தியாகம்...
இது என் மனதில் பதிந்த நீயா நானா கோபியின் வசனம்...
இப்பொழுது பதிந்தது உன்னுடைய கருத்தும் என் மனதில் ...

நிகழ்காலத்தில்... said...

\\கைக்குழந்தையும் கள்ளிப்பாலுமாய் நின்றவளிடம்
பொய்த்துப் போனது
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு”\\
—————————————————————————————

கவிதைகள் அருமை

வாழ்த்துக்கள்

பார்த்திபன் said...

mikka nanri...