கல்யாணத்துக்கு இன்னும் நாளிருக்கு, இப்போதைக்கு தொலைபேசிதான்.. அப்போ

எண்திசையும் சூழ்ந்தென்னை
உன் வசம் ஆக்கினாய்
யாழிசை போல் கொஞ்சுந்
தமிழ் பாடித் தாலாட்டினாய்
குரல் மட்டுந் தந்தெந்தன்
உயிர் மொத்தங் களவாடினாய்
கொண்ட விழி கண்டிருக்க
கூட என்னைத் தந்தனைக்க
காலம் வரக் காத்திருப்பேன்
கவிதை உந்தன் கரம் பிடிப்பேன்.
No comments:
Post a Comment