Wednesday, May 5, 2010

இன்று மட்டும்…

விழி மூடா இமைகளுடன் மலரவிருக்கும் திருமண காலைக்காகக் காத்திருக்கும் மணமகனின்,  கடைசி இரவுத் தனிமை இங்கு கவிதையாய்…

இன்று மட்டும் ஏன், இரவுக்கு
என்மேல் இத்தனை நேசம்?
என்னைக் கடக்காமல் விரிகிறது!!

இன்று மட்டும் ஏன், நிலவுக்கு
என்மேல் இத்தனை பாசம்?
என்னை விலகாமல் காய்கிறது!!

இன்று மட்டும் ஏன், குளிருக்கு
என்மேல் இத்தனை மோகம்?
என்னைத் துளைக்காமல் அனைக்கிறது!!

இன்று மட்டும் ஏன், முகிலுக்கு
என்மேல் இத்தனை காதல்?
என்னை நனைக்காமல் மேய்கிறது!!!

ஏய்!!
பிரிய மறுக்கும் இருளே
இன்று மட்டும் ஏன்
என்மேல் இத்தனை மயக்கம்,
ஒருவேளை,
அறிந்திட்டாயோ என் திருமணச் செய்தியை??
ஆம்!!
இதுவே என் கடைசித் தனிமை
இயன்றவரை இன்றே என்னைப் பருகிக்கொள்
இனி என்றும் எதிர்படாதென்
தனிமைப் பொழுதுகள்..

நாளை முதல்…
இறைவனே கேட்டாலும்
இயற்கையே யாசித்தாலும்..
இரவலாய்க் கூடத் தரமாட்டாள்
அவளுக்கான என் பொழுதினை

இனி இருள் என்னைத் தொடுவதும்
காலைக் கதிர் என்னைச் சுடுவதும்
அவள் அருள் விழி
இசைந்தாலே சாத்தியம்..

அவளுக்கான என் நொடிகளும்
எனக்கான அவள் நாட்களும்
துவங்கத் தவிக்கும் காலை நேரம்
இதோ எந்தன் சன்னலோரம்
இருளே நீ வெளுத்திடு சீக்கிரம்
இனி என்றும் நான் அவளுக்கு மாத்திரம்.

3 comments:

movithan said...

வாலி படத்தில் வரும் முதலிரவு பாடல் ஞாபகம் வருகிறது.
அழகான கவிதை

பார்த்திபன் said...

mikka nanri...

எல் கே said...

//
இனி இருள் என்னைத் தொடுவதும்
காலைக் கதிர் என்னைச் சுடுவதும்
அவள் அருள் விழி
இசைந்தாலே சாத்தியம்..//

arumai