Monday, December 28, 2009

ரா.....

விடியல்..

வியர்த்திருந்த
வீதியோர மரங்களில்
உயிர்த்திருந்தது
கடந்து போன
மழை இரவின்
மிச்சங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
நேற்று இன்று நாளை..

அதிகாலைச் சமவெளியில்
விழித்திருக்கும் மலர்க் கடையில்
சிரித்திருக்கும் ரோஜாக்களைச்
சீண்டுவதில்லை
நேற்றைய பிரிதலின் ரணமும்
நாளைய இறத்தலின் பயமும்…

-------------------------------------------------------------------------------------------------------------
தொடர்கதை..

தினம் தினம்
தோண்டப்படும்
என் பகல் கோபங்கள்
பக்குவமாய்ப்
புதைக்கப்படுகின்றன
அன்றைக்கான இரவின்
மயான இருளில்..

-------------------------------------------------------------------------------------------------------------
அவளுடன்..

முந்தைய இரவின்
முடிவிற்கும்
இன்றைய காலையின்
விழிப்பிற்கும்
இடையே
விரிக்கப்பட்ட இருளினூடே
பரிமாரபட்டிருக்கிறது
நம் ஸ்பரிசங்களின்
சுவடுகள்..

-------------------------------------------------------------------------------------------------------------
அமாவாசை..

வெண்மதி தின்று
இருள் ஈட்டிய
வெற்றியின்  இறுதியில்
மீண்டும்
துவங்கும் இருள்
குடிக்கும் யுத்தம்
அது பௌர்ணமிக்கான
ஆயத்தம்..

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அமாவாசை

ரொம்ப சிந்திச்சிருக்கீங்க நைஸ்...!

அன்புடன் நான் said...

அனைத்தும் அருமை....விடியலை ரசித்தேன்....வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

எல்லாமே ரொம்ப ஆழமான சிந்தனை...
மிகவும் அழகாய் இருக்கிறது...
வாழ்த்துக்கள்...

A.Muthukumar said...

நேற்றைய பிரிதலின் ரணமும்
நாளைய இறத்தலின் பயமும்…

ரொம்ப ஆழமான அருமையன சிந்தனை...