Wednesday, December 2, 2009

சிந்தனைத் தூறல்...



மாயை..


இதுவரை இருபதென்றே
எண்ணியிருந்தேன்…
பக்கத்துக்கு வீட்டுப் பையன்
மாமா என்றழைக்கும் வரை!! :-)
——————————————————————————————————-
எதார்த்தம்..


இத்தனை நாள் ரசித்துக்
கொண்டுதான் இருந்தார்
நான் தண்ணீர் விட்டுக் காப்பதை
திடீரென வேர் என்
நிலத்தில் என்கிறார்
கண்டுவிட்டார் போலும்
காய்ப்பதை!!!
——————————————————————————————————-
இலவு காத்த கிளி..

தினம் தினம் அவள் வந்தமர
சன்னலோர இருக்கை
பிடித்துக் காத்திருந்தேன் - அவன்
வண்டியின் பின்னிருக்கையில்
அவள் செல்வதறியாமல்!!
——————————————————————————————————-
வளர்ச்சி..


நிலவில் நீர்
காவிரியில் கானல் நீர்
இதுதான் இருப்பதை விட்டுப்
பறப்பதைப் பிடிப்பதோ!!!
——————————————————————————————————-
வலியின் வரிகள்..


அக்றிணைகள் அரசாள
வேலிக்குள் விம்மியது மனிதம்
கலிகாலம் என்றார் கடவுள்!!!
——————————————————————————————————-
இருளில் இனம் கொல்லும்
ஆசாமி
ஒளியில் புத்தம் சரணம்
தச்சாமி
எங்கதாண்டா இருக்கு இந்த
சாமி

3 comments:

ரோஸ்விக் said...

நல்லாயிருக்கு நண்பரே! வாழ்த்துகள். :-)

பார்த்திபன் said...

மிக்க நன்றி...

கமலேஷ் said...

கவிதை கலக்குது நண்பரே....