Wednesday, October 28, 2009

குளிரும் சொர்க்கம்...


பனியின் வெண்மையும், வெண்மையின் மென்மையும் கண்டு களித்ததன் விளைவு இங்கு கவிதையாக…
வெண் முகில் உருக்கி

மின்னல் தூரிகை தொட்டு
இயற்க்கை இயற்றும்
எழில் வண்ணக் காவியம் - இது
சலவை செய்த ஓவியம்..



குளிரும் சொர்க்கம்...







பச்சை கொஞ்சம்
பால்நிறம் கொஞ்சம்
பரவிக் கிடக்கும்
பனிமலர் தேசம்
நினைவில் கொஞ்சம்
புல்நுனியில் கொஞ்சம்
தங்கிச் செரிக்கும்
வெண்பனி மிச்சம்
குளிரில் கொஞ்சம்
கூதலில் கொஞ்சம்
உரைந்து கிரங்கும்
நதிகளின் தேகம்
வெண்நிலா கொஞ்சம்
வான்முகில் கொஞ்சம்
கலந்து வரைந்த
அற்புதக் கோலம்
இங்கு இரவுக்கும் குளிரெடுக்கும்
பகலுக்கும் இருள் பிடிக்கும்
பார்க்கையிலே உடல் விரைக்கும்
பழகிவிட்டால் இது பிடிக்கும்
சொர்க்கமும் இதன் பிரதியே
சொன்னதெல்லாம் ஒரு பகுதியே!!!!




காலச் சக்கரம்..





கொதித்திருந்தான் கதிரவன்
வியர்த்திருந்தாள் நிலமகள்
ஆடையெல்லாம் அவனுருக்க
நாணி நின்றால் கோடியாக
நிலை கண்ட மரமெல்லாம்
இலை உதிர்த்து உடையாக்க
கிளைகள் எல்லாம் நிர்வாணம்
பெற்ற நன்றி மறப்பாளா
பேதை அவள் சகிப்பாளா
உடை தந்து தனைக்காத்த
மரங்கள் தம் மானம் காக்க
தழுவிட்டால் மேகமதை
குளிர்வித்தால் காற்றதனை
அடைமழை எல்லாம் பனியாக
அளித்திட்டால் உடையாக
புத்தாடை பெற்ற மரமெல்லாம்
நன்றி சொல்லக் காத்திருக்க
கோடை வந்து சேர்ந்தது
கொதித்தெழுந்தான் சூரியன்….
 



1 comment:

A.Muthukumar said...

நல்ல வரிகள் :

''எழில் வண்ணக் காவியம் - இது
சலவை செய்த ஓவியம்..''

''இங்கு இரவுக்கும் குளிரெடுக்கும்
பகலுக்கும் இருள் பிடிக்கும்''

''பேதை அவள் சகிப்பாளா
உடை தந்து தனைக்காத்த
மரங்கள் தம் மானம் காக்க
தழுவிட்டால் மேகமதை''...

பாராட்டுக்கள் பார்த்தி...