அழியும் ஆதாரம்…
அன்னம் அளிக்கும் மண்ணைத்
திண்ணமாய் மறக்கும்
விந்தை மனிதர்களின்
வியாபாரச் சந்தையில், வினாடியில்
விளை நிலங்கள் விலை போக!
விதையின்றி விருட்சமாகும்
அடுக்குமாடிக் கட்டிடங்கள்!!
கதிர் விளைந்த இடத்தில்
மதில் வளர்ந்ததால் மறத்தது,
முப்போகமும் முறை தவறாது
முளை விட்ட மாசற்ற மண்
மட்டும் அல்ல வறுமைக்கு
விலைபோன உழவனின்
மனமும் தான்!!!
வள்ளுவன் வழியில் சிறு முயற்சி….
உழவு
ஆதாரம் அழித்து வியாபாரம் பெருக
ஆகாரமற்று அவதியுறும் அவனி
மண்ணிழந்து வின் தொடுபவர் கண்ணிழந்து
கலைகள் காணக் கருதுவர்
உருமாறும் உலகம் !!
உழவன் அன்று
மக்கள் உய்ய மண்ணை மணந்தான்
உழவைப் போற்றிய உலகில்!!!
இன்று தான் பெற்ற
மக்கள் உய்ய மண்ணை இழந்தான்
உழைப்பை உணரா உலகில்!!!
2 comments:
Good one..this is the first one I read..Un yekkam puriyuthu..itharkku nee enna seiya pora?..ethavathu plan irukka?..
nanri... aekkthin velippaadudhaan en ezhuthukkal... perusa edhum illenaalum chinnadha konjam plan irukku... ippodhaikku oru thottam vaangi irukken...
Post a Comment