Sunday, March 15, 2009

எங்க வீட்டுப் பொங்கல்....

உலகை உய்விக்கும் உயர் தொழிலாம் 
உழவின் உன்னதத்தை உள்ளத்தில் நிறுத்த! 
தன்னைத் தந்து மண்ணைக் காக்கும் உழவரின் 
ஒப்பற்ற தொண்டினை ஊருக்கு உணர்த்த ! 
உழவுக்கும் உழவர்க்கும் உறுதுணையாய் 
உற்றதுணையாய் நின்று உழவைக் காக்கும் 
உயிர்களின் உணர்வைப் போற்ற! 
அனுதினமும் ஆகாய அரங்கமேறி அறுவடைப் பயிருக்கு 
ஆன்மா தரும் ஆதவனின் அன்பைப் புகழ

தரணி வாழ் தமிழர் தனக்கெனக் 
கண்டெடுத்த தவத்திருநாள் இந்தத் 
தைத்திருநாள்!!

திருநாளின் முதல் நாளாம் காப்புக்கட்டு 
கதிரவனுக்கு முன் கண் கலைந்து 
புழுதி படிய சாணமிட்டு 
சாயும் காலம் வரை சலிக்காமல் கோலமிட்டு 
அன்று பரித்த ஆவரம் பூவையும் 
புதிதாய்ப் பூத்த பூலம் பூவையும் 
வீட்டில் ஒடித்த வேப்பிலையுடன் சேர்த்து 
வாசல் நிறையத் தோரணமிட்டு 
துள்ளலுடன் துவங்கும் தமிழ்த்திருநாள்

திருநாளன்று…

பொழுது புலர புத்தாடை பூண்டு 
அதிகாலை ஆதவனுக்குப் புத்தரிசிப் பொங்கலிட்டு 
பண்டிகைக்கால விருந்தினரான லியோனி, பாப்பையாவின் 
சிரிப்புச் சிந்தனையில் மூழ்கி மயங்கிய மதிய வேலையில் 
பூசணிக் கரியுடன் அறுசுவை அமிர்தம் அன்னையின் 
கையில் அருந்த அன்பில் நிறையும் அகம் 
சற்று நேர உறவினர் உரையாடல்களுக்குப் பின் 
அலுவலக அவதியில் பரபரப்பாகும் 
சாலைகள் போல பட்டிப் பொங்கலுக்கான 
ஆயத்த வேலைகள் விறுவிறுப்புடன் தொடரும்

பட்டிப் பொங்கலன்று…

பண்டிகை நாயகர்களும் 
உழவரின் உறவுகளுமான உயிர்கட்கு 
வர்ணம் இட்டு சந்தனம் பூசி 
அந்திசாயப் பொங்கலிட்டுப் பக்குவத்துடன் 
பரிமாறி பந்தியிட்ட உடன் 
பளபளக்கும் காளைகளைப் பூட்டிய 
வண்டிகள் பந்தயத்திற்குப் பறக்கும் 
வேகத்தில் மின்னலென முடியும் 
மூன்று நாள் கொண்டாட்டங்கள்

மண்ணின் குணம் காக்கப் கண்ட 
அற்புதத் திருநாளின் மணம் மாறாமல் 

கொண்டாடி மகிழ்வோம்…..

2 comments:

Titan said...

Sooper!!!.maattup pongalukku patti pongalunnu solluvaangannu ippothaan theriyum..keep up the good work!! for ppl like me.One question..ulavau pathiyae nariya irukkae un kavithai..

பார்த்திபன் said...

ippovaavadhu therinjukittiyae sandosham... :-) adhaampaa ellaarthukkum adippadai.. adha vituttu enga poradhu.. :-)

enakku romba pidichadhunnu vechukkoye..