Sunday, March 15, 2009

விசித்திரச் சித்தர்....

இக்கதையின் கதைக்களம் உண்மையான போதிலும், இக்கதையில் வரும் சம்பவங்களும், கதை மாந்தர்களும் எனது கற்பனையே..


பூம்…. டமால் பூமி அதிர வெடித்துச் சிதறிய குண்டுகள் அந்தக்  கட்டிடத்தை நொடிப் பொழுதில் நிர்வாணமாக்கியது. குண்டு வெடிப்பும், செல் அடிப்பும் இவர்களது வாழ்க்கையில் தினசரி சடங்காகிப் போனபோதிலும் இன்றைய நிகழ்ச்சி தடம் மாறிய இவர்களது வாழ்க்கைப் பயணத்தை நிலைப்படுத்த இருப்பது இவர்களுக்கு புலப்பட வாய்ப்பில்லைதான்…


முப்பது நிமிடங்களுக்கு முன்….


லலலாலலாலா லலலாலலாலா… 
இது எங்கள் நாடே
இது எங்கள் வீடே!! 
லலலாலலாலா லலலாலலாலா… 
உரிமைப் போர் பூண்டு
உயிர் கோடி மாண்டு 
ஈழம் இது கண்டோம் 
இனி வீழ மாட்டோம்!!! 
லலலாலலாலா லலலாலலாலா… 
ஈழம் இனி வெல்லும் 
உலகம் கதை சொல்லும்!!!
லலலாலலாலா லலலாலலாலா….


என்று கண்ட கனவு நினைவானதாய் கற்பனை செய்து கவிபாடிய ஈழத்து பாரதி பாலச்சந்திரனின் பாடலை இசையோடு நயமாய் கலந்து, களிப்புடன் பண்பாடிக்கொண்டு சகதி நிறைந்த அந்த ஒற்றை அடிப் பாதையில் ஒய்யாரமாய் தனது ஊரை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தாள் மேகலை. திரிசங்கு சொர்க்கத்தை தரையில் கிடத்தியது போன்று செழிப்பிலும், செல்வதிலும் உயர்ந்து விளங்கிய கானகரையான்குலம், இடைவிடாத இனப் போரில் சிக்கி இன்று சிதைவுண்டிருந்தது. போராளிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடக்கும் போர் உச்ச கதியை எட்டிய நிலையில் எதிரணியின் கையே சில நாட்களாக ஓங்கி இருந்தது. இன்னும் மூன்று மாகாணங்களே போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த பின்னடைவுக்குப் பெரிதும் காரணம் நரிகளாய் மாறிப் போன சில புலிகளே என்று பரவலாக நம்பப்பட்டது. 
இத்தகைய நெருக்கடியான சூழலில் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க போராளிகளின் தலைவரும் அவர்களின் முக்கிய தளபதிகள் மூவரும் மேகலையின் தந்தை கவிஞர் பாலச்சந்திரனின் வீட்டில் இன்று கூட இருந்தனர். இந்த கூட்டம் போரின் போக்கை மாற்ற புது யுக்திகளைக் கண்டெடுக்கவே என்பதால் இந்தக் கூட்டம் போரில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பெருதும் எதிர்பார்க்கப்பட்டது. 
கவிஞர் பாலச்சந்திரன், ஈழத்து பாரதி என்று மக்களால் அன்பாக அழைக்கப் படுபவர். போராளிகளின் மனதில் துளிர்த்து வேர்விட்டிருந்த விடுதலை உணர்வும், உரிமையும் இவரது எழுதுகோலின் மையினால் பாசனம் பெற்று இன்று வளர்ந்தோங்கிய விருட்சமாக்கப் பட்டிருக்கிறது. எனவேதான் இத்தகைய இக்கட்டான நிலையில் நடக்கும் முக்கியமான கூட்டம் பாலச்சந்திரனின் வீட்டில் நடக்க இருந்தது. ஆனால் ஏனோ, எரிமலையின் சீற்றத்தைப் போல் அனுதினமும் அனல் கக்கும் கவிஞரின் கூரிய கண்களில் தற்பொழுது குழப்பம் குடியேறி இருந்தது. தலைவரும் தளபதிகளும் ரகசிய பாதையின் வாயிலாக கவிஞரின் வீட்டை வந்தடைந்தனர்.  
ஆலோசனை தொடங்குவதற்கு சில நிமிடங்களே இருந்த நேரத்தில் கவிஞரின் வீட்டின் பின்புறம் சலனமில்லாமல் வந்து நின்றது ஒரு நீல நிற வாகனம். அந்த ஊர்தியின் உள்ளிருந்து சமிக்ங்கை செய்வது தன் மகன்தான் என்பதை உறுதி படுத்திக் கொண்ட உடன் தன் இல்லத்தில் வீற்றிருக்கும் விருந்தினரைப் பற்றிக் கூட சிந்திக்காதவராய்த் தன் மகனின் வாகனத்தில் ஏறி காலைக் கதிரில் தொலையும் மூடுபனியென நொடிப் பொழுதில் அவ்விடம் கடந்து மறைந்தார் கவிஞர்.

அதே சமயம் தன் தந்தையின் கவியாற்றலையும், தனையனின் போர் தீரங்களையும் எண்ணிக் கனவுலகில் மிதந்து வந்த மேகலையின் காதுகளில் ஓர் அதிபயங்கர வெடிச்சத்தம் இடியென ஒலிக்க. உள்ளத்தில் ஒரு கோடி அபாய சங்குகளின் முழக்கத்துடன் தன் வீட்டை நோக்கி ஓடினால் மேகலை.. 
"ஐயோ!! எங்கள் தியாகத்  திருமகனின் திருஉருவம் தெருவில் உதிர்ந்ததே" 
 "எங்கள் குலதெய்வம் கொலையுண்டு விட்டதே" 
என்ற வான் பிளக்கும் அவலக் குரல்களுக்கு மத்தியில் குண்டு வெடிப்பில் முற்றிலும் சேதமடைந்த அவளின் வீட்டைச் சுற்றி ஊர் மக்கள் முற்றுகையிட்டிருந்தனர். அக்குரல்களுக்கு இடையில் குருதி நனைத்த மாலைக் கதிரவனாய்ச் செங்கதிர் பரப்பிய இணையற்ற தலைவனின் சிரம் உடல் துறந்தும் உணர்வு துறக்காமல் பிண்டமாய்க் கிடப்பதைக் கண்ட நொடி மேகலையின் உலகம் இருண்டது. எதுவும் சிந்திப்பதற்குள் சில நொடிகளில் மூர்ச்சையுற்று மண்ணில் வேரறுந்த மரமாகச் சாய்ந்தால். 
மூன்று நாட்களுக்குப் பிறகு ராணுவத்தினரால் கைபற்றப்பட்ட தலைவனின் உடல் மருத்துவ சோதனைக்கு அனுப்ப பட்டது. இறந்தது தலைவர்தான் என்பதை உறுதி செய்த பிறகு அவரது சரித்திர சரீரம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலைகடலென ஆர்பரித்த மக்களின் சோக கீதங்களுடன்  மாசற்ற மறவனின் உணர்வுகுழையாத உத்தம உடல் மண்ணில் புதைந்தது.


கதிரவனும் கால் பதிக்காத அடர்ந்த கானகத்தின் மத்தியில் அசோக வனமெனக் காட்சியளித்த அற்புத தோட்டத்தில் ஐந்து நாட்களாக நினைவு துறந்து நித்திரையில் இருந்தால் மேகலை.  இத்தனை நாட்கள் தன்னை மறந்த நிலையில் இருந்த மேகலையின் மனதில் அந்த பயங்கர நிகழ்ச்சியின் நினைவுகள் பேரலை என எழ பதறி எழுந்தால். அவள் கண்ட கொடூரங்கள் அனைத்தும் ஏதோ கனவு போல் இருக்க நடுக்கடலில் கரை தேடும் கண்களாக அவளது நினைவுகள் நிஜம் தேடி நிலையின்றி அலைந்தன. ஒருவாராக நினைவுகளுடனான நீண்ட போராட்டத்துக்குப் பின் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையென்று உணர்ந்தால் மேகலை. இருப்பினும் சொர்கலோகம் போல் காட்சி தரும் இந்த இடத்திற்கு தான் எப்படி வந்தேன், இது என்ன இடம் என்ற என்ன ஓட்டங்களுடன் ஒன்றும் புரியாமல் மெல்ல எழுந்து அருகிலிருந்த சாலரம் வழியாக தன் கூரிய விழியின் பார்வையை வியாசப்படுதினால். என்ன ஆச்சர்யம் அங்கு சுமார் ஐந்த்நூறு வீரர்களுக்கு போர்ப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இது ஒரு வேலை எதிரிகளின் கூடாரமோ என்று ஒரு நிமிடம் எண்ணிய மேகலையின் கண்கள் சிறு புள்ளியென தொலைவில் தெரிந்த ஓர் உருவத்திடம் மையம் கொண்டது. புள்ளியென இருந்த உருவம் மெல்ல தன் விட்டதைப் பெருக்கி விரிய, அதை உற்று நோக்க விரிந்த தனது வேல் விழிகளைப் புள்ளியெனச் சுருக்கினால் மேகலை. அவளை நோக்கி வந்த உருவத்தின் ஒலி சிந்தும் முகம் மேகலையின் கண்களை நிறைக்க தான் இருப்பது சொர்க்கலோகம்தான் என்று உறுதி செய்தால்.

ஆம், அன்று செங்கதிரவனாய்க் குருதியின் மத்தியில் கண்ட தங்கள் தலைவனின் முகம், இன்று முழுச்சந்திரனாய் தன்னை நோக்கி வருவது கண்டு சித்தம் குழம்பி நின்றால். இதற்குள் கை தொடும் தூரத்தில் அவளை நெருங்கி இருந்த தலைவரின் உருவம், மேகலை!! என்னிடம் கேட்பதற்கு

ஏதாவது கேள்வி இருக்கிறதா என்று வினவ..

என் தந்தை எங்கே? என் தனையன் எங்கே? குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா? நீங்கள் இறக்கவில்லையா? இது என்ன இடம்? என்று மனதில் உதித்த எண்ணிலடங்கா கேள்விகளில் எதைக் கேட்பதென்று புரியாது ஊமையாகி நின்றால் மேகலை.

அவள் படும் பாட்டைக் கண்டு நகைத்த தலைவர் அவளை அருகிலிருந்த நாற்காலியில் அமரவைத்துவிட்டு நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக விளக்கலானார்…

மேகலை! சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு நானும் உண்ட அப்பாவும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தோம். போரினால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இயலாது என்று அறிந்தும் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆயுதமேந்தி நான் களமாடிய காரணம், எம் மக்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை இவ்வுலகத்தார் பார்வைக்கு கொண்டு வரவே. முப்பது ஆண்டு கால தொடர் போரின் காரணமாக இன்று ஒட்டுமொத்த உலகின் பார்வையும் நம்மேல் இருக்கிறது.

எனவே நம்மட இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றி முறைப்படி உருமை கோர தீர்மானித்தோம். ஆனால் நான் உயிரோடு இருக்கும் வரை அமைதி வழிக்கு இராணுவம் திரும்பாது என்று உணர்ந்ததால் உரிய சந்தர்ப்பத்தில் என்னைக் கொன்று விட்டு, நம்மட அரசியல் இயக்கத்தைப் பொறுப்பேற்று நடத்தும் படி உன் தந்தையைப் பணித்தேன். அதற்கான திட்டங்களும் தயாராகின. நாங்கள் எதிர்பார்த்து போலவே அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வி உற்ற உடன் ராணுவத்தினர் தங்களின் தாக்குதலைத் தீவிரபடுதினர். நாமும் தோற்பது போன்று பாசாங்கு செய்து மெல்ல பின்வாங்கினோம்.

இராணுவம் நம் தலைநகரை நெருங்கிய உடன் எதிர்போர் தொடுத்து அவர்களின் படைகளைச் சிதறடித்தோம். வீரர்களை இழந்து அரசு திண்டாடும் வேலையில் உன் அருமைத் தந்தை பாலச்சந்திரன் அரசு செலுத்துவோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்குப் போராளிகளுக்கும் சம்பந்தம் இருப்பது யாருக்கும் தெரியாத காரணத்தால் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்தது. நமக்கு வேண்டிய அனைத்து கோரிக்கைகளும் அவர்கள் முன் வைக்கப்பட்டது, அதற்க்கு விலையாக எனது உயிரைத் தருவதாக உன் தந்தை பேசினார். அந்தத் தருணத்தில் அவர்களது இராணுவம் கடுமையான இழப்பைச் சந்தித்ததாலும், உன் தந்தையின் உறுதியான பேச்சினாலும் அரசு இந்த திட்டத்தை ஒப்புக்கொண்டது.

அடுத்த சில நாட்களில் அவர்கள் தலைநகரில் ரகசியமாய் நடந்த ஒரு கூட்டத்தில் பல நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் மத்தியில் நம் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகள் கை ஒப்பமிடப்பட்டன. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக உன் தந்தை என்னைக் காட்டிகொடுக்க உடல் சிதறி உயிர் இழந்தேன்.

இவ்வளவு நேரம் மௌனியாக அவரின் பேச்சைக் கேட்டிருந்த மேகலை இப்பொழுது மௌனம் கலைந்தால்.

என்ன? …

என்று அழுத்தமாக அவள் கேட்ட கேள்வி ஆயிரம் குழப்பங்களை உள்ளடக்கியிருந்தது. மேகலையின் கேள்விக்கு ஒரு மந்திரப் புன்னகையை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.

இறுதியாக எனக்குக் கிடைத்த தகவலின்படி எம் படையினர் முன்பே திட்டமிட்டதுபோல் பகுதி பகுதியாக பாலச்சந்திரனின் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் வரும் காலங்களில் நம் மக்களின் உரிமை பறிக்கப்படும் சூழ்நிலை எழும் நிலையில், ஒரு வாரத்தில் நம் மாகாணங்கள் அனைத்தையும் கைப்பற்ற படையினரைத் தயார் நிலையில் வைத்துள்ளேன். எங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தால் இது ஒரு முற்றுபுள்ளி இல்லையேல் இது வெறும் இடைவேளைதான்.

அப்பொழுது நாம் இருவரும் இறந்து விட்டோமா இப்பொழுது நாம் இருப்பது சொர்க்கலோகமா என்று ஆர்வம் பொங்கும் கண்களுடன் மேகலை கேள்வி எழுப்ப..

கல கல…  என சிரித்த தலைவர் உனது குழப்பம் எனக்கு புரிகிறது மேகலை அன்று நீ குண்டு வெடிப்பில் கண்ட சிதறிய உடல் எனதன்று.  பிளாஸ்டிக்  அறுவை சிகிச்சை முறையினால் என்னை போலவே  உருமாற்றம் செய்யப்பட்ட மற்றொருவரின் உடல்.  மேலும் டி.என். ஏ சோதனையில் அவர்கள் உண்மையைக் கண்டறியாமல் இருக்க க்ளோனிங் முறையைப் பயன்படுத்தி எனது திசுக்கள் செலுத்தப்பட்டு எனது குணாதிசயங்களை பெற்ற எனது மாதிரி. 

நாம் இன்னும் உயிருடன்தான் இருக்கிறோம்.  எம் மக்களுக்கு முழு உரிமை கிடைக்கும் வரை இந்த உயிர் மண்ணுலகம் விட்டு மறையாது என்று உரக்க உரைதவரைக் கண்களில் நீர் ததும்ப வியந்து நோக்கினால் மேகலை….

 

"முறையான வழியில் பயணிக்காத எந்த ஒரு உயர்ந்த நோக்கமும், காலத்தின் வேகத்தில் தன்னிலை மாறித் தாழ்வடையும்"

No comments: