Saturday, February 6, 2010

தட்டையானதோ உலகம்??


ஏழாம் வகுப்பிலிருந்து, கல்லூரி இரண்டாம் ஆண்டு வரை தொலைக்காட்சிப் பெட்டிக்கு வாழ்வின் மிக முக்கிய நாட்களை திருடு கொடுத்தவன் நான்.  ஏதாவது புக் படி அப்டினு அப்பா சொன்னதெல்லாம் சுத்தமா கண்டுகிட்டது கிடையாது.  வீணடித்த நாட்களின் அருமை உணர ஆனது ஆண்டுகள் பல.
அட இவனும் நம்மள மாதிரிதான் அப்டினு நினைக்கறீங்களா…  நினைக்கறவங்க வாங்க..
நான் அதிகம் பேசியது


வேண்டுமானால் நண்பர்களுடனாய்
இருக்கலாம் ஆனால்
அதிகம் பார்த்தது உன்னைத்தான்
உன்னைப் பார்த்த நேரத்தில்
ஒரு பெண்ணைப் பார்த்திருந்தாள்
காதலித்தாவது தோற்றிருப்பேன்..
********

பில்லி, சூனியம் இன்னும்
எத்தனை வசியம்
வைத்திருந்தாலும்
தோற்றிருப்பார்கள்
பிரிக்க எண்ணியவர்கள்..
 ********

பக்கத்துல உட்காந்து பாக்காத…
சாப்பட்ரப்ப அங்க என்ன பார்வ…
இந்த நேரம் ரெண்டு புக் படிச்சிருக்கலாம்..
கண்டிப்பாகக்    காயப்படுத்தியிருக்கும்
அலட்சியப்படுத்தப் பட்ட அப்பாவின்
வார்த்தைகள்..
********

அதென்னவோ அமாவாசை
அலைகள் போல்
பரீட்சை அன்று மட்டும்
அவ்வளவு ஈர்க்கிறாய்
உனக்குத் தெரியுமோ
தெரியாதோ உன்னால்
நான் தோற்பது…
*******

இன்று  கலிலியோ இருந்திருந்தால்
உலகம் உருண்டை என்பவரை
கண்டிப்பாய்க்  கல்லால் அடித்திருப்பார்
நீதான் தட்டை ஆயிற்றே…
******

12 இன்ச்சில் துவங்கி
மெல்ல மெல்லப்  பெருத்து
இன்று 46 இன்ச்சில்
கம்பீரமாய் நிற்கிறாய்
சொந்த செலவில் சிறை
செய்து நாங்களே
அடைந்து கொண்டோம்..
*******

நீ என்னவோ அறுசுவை
உண்டிதான் வைத்தாய்
ஆனால் எனக்குத்தான்
இனிப்பை மட்டுமே உண்ணும்
வழக்கம்..
********

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in